Tamilswiss.com

சிரியாவில் அதிகரிக்கும் மோதல்: இஸ்ரேலில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்..!

சிரியாவில் அதிகரிக்கும் மோதல்: இஸ்ரேலில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்..!

சிரியாவில் நெருக்கடி நிலை அதிகரித்து காணப்படுவதால் அதன் அண்டை நாடான இஸ்ரேலிலும் நிலைமை பதட்டமாக காணப்படுகிறது. அங்குள்ள சுவிஸ் நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதி எரிச் ப்ளோச், தனது 18,000 சக சுவிஸ் குடிமக்களை சுவிஸ் தூதரகத்துடன் பதிவு செய்ய கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கடந்த வெள்ளியன்று டமாஸ்கஸ் அருகே அமெரிக்கா தலைமையில் வான்வழி இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பேசிய ப்ளோச், இஸ்ரேலில் நிலைமை "தெளிவாக இல்லை" என்றார்.

"வானத்தில் இருந்து ஒரு நிலையான ஹம்மிங் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது," என்று அவர் கூறினார். "ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், மற்றும் ட்ரோன்கள் நாட்டை வட்டமடித்துக்கொண்டே இருக்கிறது. வடக்கில் இராணுவம் எச்சரிக்கையுடன் உள்ளது, மற்றும் இராணுவ துருப்புக்கள் கண்களுக்கு தென்படுகின்றன." இது அஞ்சவேண்டிய நிலைக்கு வழிவகுத்துள்ளது, மக்களின் மனநிலையில் இது நன்கு பிரதிபலித்தது.

இஸ்ரேலிய பங்கு

இஸ்ரேலிய எல்லைக்கு அருகே மற்றும் இராணுவம் இல்லாத கோலன் மலைப்பகுதியில் சிரியா தாக்குதல் நடத்த வாய்புள்ளதாக அவர் தெரிவித்தார். இது இந்த யூத நாட்டை போரில் ஈடுபட தூண்டிவிடும் என்று பிளோச் கூறினார், ஏனெனில் எல்லைக்கு அருகே ஈரானிய துருப்புக்களின் இருப்பை சகித்துக் கொள்ள மாட்டேன் என இஸ்ரேல் நீண்ட காலத்திற்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளது.

"டாராவில் சிரியா தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் இன்னும் தீவிரமாக இந்த போரில் தலையிட வழிவகுக்கும்," என்று அவர் கூறினார்.

சுமார் 18,000 சுவிஸ் மக்கள் இஸ்ரேலில், குறிப்பாக பெரிய நகரங்களில் (ஜெருசலேம், டெல் அவிவ், ஹைஃபா, அஷோட்) மற்றும் கிப்புட்ஸ் குடியேற்றங்களில், குறிப்பாக வடக்குப் பகுதியில் வாழ்கின்றனர்.

இஸ்ரேலில் உள்ள OSA எந்த அவசரநிலைக்கும் தயாராக இருப்பதாக பிளொச் கூறுகிறார். மேலும், ஏற்கனவே பதிவுசெய்யவில்லை என்றால் டெல் அவிவில் உள்ள சுவிஸ் தூதரகத்துடன் பதிவு செய்யுமாறு அவருடைய சக சுவிஸ் மக்கள் அனைவரையும் அவர் கேட்டுக்கொள்கிறார்.

(Image: www.swissinfo.ch)